தொகுப்பாளினியிடம் கோபப்பட்ட ஐஸ்வர்யா ராய் - காரணம் என்ன?
- 29 Jun 2024 15:53:39
1973ஆம் ஆண்டு மங்களூரில் பிறந்த ஐஸ்வர்யா ராய், கடந்த 1994ஆம் ஆண்டு தனது 21வது வயதில் உலக அழகிப் பட்டத்தை வென்றார். பிறகு மாடலிங் துறையில் ஜொலித்த அவர், 1997ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் தமிழில் வெளியான இருவர் திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து அறிமுகமானார். அதன்பிறகு பாலிவுட் திரையுலகில் நுழைந்த அவர் பல படங்களில் நடித்தார்.
பாலிவுட்டில் ஸ்டார் ஹீரோக்களுடன் நடித்து பிரபலமான நடிகை ஐஸ்வர்யா ராய், பல சூப்பர் ஹிட் படங்களையும் கொடுத்தார். இதனால் பல இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த அவர், ஹீரோக்களுக்கு இணையான சம்பளத்தை வாங்கிய முதல் நடிகை என்ற அஸ்தஸ்தையும் அவர் பெற்றார்.
திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தபோதே, அவர் அடிக்கடி காதல் சர்ச்சைகளிலும் சிக்கி, செய்திகளில் வலம் வந்தார். ஆரம்பக் கட்டத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் உடன் காதல் கொண்ட ஐஸ்வர்யா ராய், அவரை பிரிந்து சல்மான் கானுடன் டேட்டிங் செய்தார். சல்மான் கான் உடனான காதலும் நீண்டகாலம் நீடிக்கவில்லை. இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு, சல்மான் கான் தன்னை வாய்க்கு வந்தவாறு திட்டியதாகவும், அடித்து துன்புறுத்தியதாகவும் ஐஸ்வர்யா ராய் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக தகவல் வெளியானது.