பூஜையின்போது இந்த ஒரு பொருளை கட்டாயம் வைக்கணுமாம்.. பூஜை அறையில் தண்ணீர் வைப்பதில் இத்தனை பலனா? அடடே
- 29 Jun 2024 16:04:04
பூஜையின்போது மணியோசை எழுப்புவது கட்டாயம் என்பார்கள்.. காரணம், துர்சக்திகள் எதுவும் நெருங்காமல் இருப்பதற்குத்தான். இந்த மணியோசை எழுப்பப்படுகிறது.. இந்த ஓசையானது தீய சக்திகளை விரட்டி, தெய்வீக சக்தியை வீட்டில் நிலவச் செய்யும் வல்லமை கொண்டது.
அந்தவகையில் வீட்டு பூஜைகளின்போது எப்போதும் தண்ணீர் பயன்படுத்துவார்கள்... பூஜைகள் என்றாலே தீர்த்தம் கட்டாயம் இடம்பெற்றுவிடும்.. காரணம், தண்ணீர் வருண பகவானை குறிக்கிறது.
மேலும், பூஜையறையில் தண்ணீர் வைப்பது, இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக வைக்கப்படுகிறது.. பூஜையறையில் தண்ணீர் வைப்பது, உங்கள் வீட்டிற்குள் செல்வத்தையும், ஐஸ்வர்யத்தையும் கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
அதுவும் இல்லாமல், பூஜையறையில் செம்பு பாத்திரத்தில் இப்படி தண்ணீர் வைத்திருந்தால், அது வீட்டின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. அதேபோல, மண் பானையிலேயோ அல்லது வெள்ளி, ஈயம் பூசிய பித்தளை போன்ற வேறு வகையிலான உலோகத்திலோ தண்ணீரை நிரப்பி வைப்பது மிகவும் நல்லது.. தினமும் தியானத்தில் அமர்ந்து நீங்கள் சொல்லும் மூலமந்திரத்தின் அதிர்வலைகள் அந்த தண்ணீரில் இறங்கும் என்பார்கள்..