கூர்மையான பார்வை நேர்மையான பார்வை

அதிவேக இரட்டை சதம்... சென்னை மண்ணில் வரலாறு படைத்த இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா!

  • 29 Jun 2024 15:53:40
தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான சென்னை டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்ததன் மூலம், பெண்கள் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக இரட்டை சதம் அடித்த வீராங்கனை என்கிற சாதனையை ஷபாலி வர்மா படைத்துள்ளார்.
Share:
How Product Designers Can Gamification for any Good.

இந்தியா - தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் இன்று வெள்ளிக்கிழமை முதல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இலவசம் என்று அறிவிக்கப்பட்டது. 

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீராங்கனைகளாக ஷபாலி வர்மா- ஸ்மிரிதி மந்தனா ஜோடி களம் இறங்கினர். மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடியில் இருவரும் சதம் அடித்து அசத்தினர். தொடர்ந்து அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தி முதல் விக்கெட்டுக்கு 292 ரன்கள் குவித்தனர். 

தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 161 பந்துகளில் 27 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 149 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து வந்த சுபா சதீஷ் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். இதன்பின்னர் களத்தில் இருந்த ஷபாலி வர்மாவுடன் ஜெமிமா ஜோடி சேர்ந்தார். 

சற்று நிதானமாக ஆடிய இந்த ஜோடியில், நிலைத்து நின்று அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஷபாலி வர்மா 194 பந்தில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். அவர் இரட்டை சதம் அடித்த நிலையில் 205 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். 20 வயதான ஷபாலி வர்மா 197 பந்துகளில் 23 பவுண்டரிகள் 8 சிக்ஸர்களுடன் 205 ரன்கள் எடுத்து அசத்தினார்.