டிஎன்பிஎஸ்சி க்ரூப் 4 தேர்வுகள்.. கட் ஆப் மார்க் எவ்வளவாக இருக்கும்? வெளியான முக்கிய தகவல்
- 29 Jun 2024 15:34:46
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூன் 9ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை நடத்தியது. தமிழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள 6624 க்ரூப் 4 காலியிடங்களை நிரப்பவே இந்தத் தேர்வு நடத்தப்பட்டது.
க்ரூப் 4 காலியிடங்கள்: க்ரூப் 4 பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு எதுவும் இல்லை.. அதாவது இந்த எழுத்து தேர்வில் உரிய கட் ஆப் மார்க் பெறுவோர் ஆவண சரிபார்ப்பிற்குப் பிறகு பணியிடங்கள் ஒதுக்கப்படும். டிஎன்பிஎஸ்சி இதுவரை கட் ஆப் மார்க்குகளை அறிவிக்கவில்லை. அதேநேரம் இந்தாண்டு கட் ஆப் மார்க் என்னவாக இருக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
6,244 காலியிடங்களை நிரப்ப இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. தமிழ் பகுதியில் இருந்து 100 கேள்விகள், பொது அறிவு, நுண்ணறிவுத் திறன் பகுதிகளில் இருந்து 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். கட் ஆப் மார்க் எவ்வளவு: இதில் பொதுப் பிரிவினரில் ஆண் தேர்வாளர்களுக்கான கட் ஆப் மார்க் 146-151 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் பொதுப் பிரிவில் பெண் தேர்வாளர்களுக்கான கட் ஆப் மார்க் 152 - 155ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல இதர பிற்படுத்தப் பிரிவினரில் (ஓபிசி) ஆண்களுக்கு 143-147, பெண்களுக்கு 146-150, பிற்படுத்தப்பட்ட பிரிவு முஸ்லீம் (பிசிஎம்) ஆண்களுக்கு 142 -145 பெண்களுக்கு 139-146 கட் ஆப் மார்காக இருக்கும் எனக் கூறப்படுகிறது