கூர்மையான பார்வை நேர்மையான பார்வை

ஜூன் மாதம் பாமாயில், பருப்பு வாங்கலையா? இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்!

  • 29 Jun 2024 15:46:31
பொது விநியோகத் திட்ட குடும்ப அட்டைதாரர்கள் ஜூன் 2024 மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பினை ஜூலை 2024 ஆம் மாதம் பெற்றுக் கொள்ளலாம் என உணவுப் பொருள் வழங்கல் துறை இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Share:
How Product Designers Can Gamification for any Good.

தமிழ்நாட்டில் விலைவாசியைக் கட்டுப்படுத்தி, ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தினைப் பாதுகாக்கவும், ஊட்டச்சத்துடன் கூடிய உறுதிப்படுத்திடும் நோக்கிலும் அன்றைய முதல்வர் கருணாநிதியால் 2007 ஆம் ஆண்டு முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் எண்ணெய் வழங்கும் திட்டம் நாட்டிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30க்கும் ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25க்கும் மானிய விலையில் வழங்கி வருகிறது. 2021ல் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.7381.91 கோடி மதிப்பிலான 7,00,396 மெட்ரிக் டன் பருப்பு மற்றும் ரூ. 7315.96 கோடி மதிப்பிலான 64,62,50,000 பாமாயில் பாக்கெட்டுகள் கொள்முதல் செய்யப்பட்டு, சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்குத் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

தேர்தல் நடைமுறையின் காரணமாக மே 2024 ஆம் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டுகள் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ஜூன் மாதத்தில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, பாமாயில், துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. எனினும், பற்றாக்குறை காரணமாக பலர் பாமாயில், துவரம் பருப்பை பெற முடியவில்லை.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் பேசிய தி.மு.க மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கடந்த மே, ஜூன் மாதங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பருப்பு, பாமாயில் வழங்கப்படாதது குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்துப் பேசிய உணவுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணி, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்பட்டது என்றும், அதன் பிறகு 2 கோடி பாமாயில் பாக்கெட்கள், தேவையான துவரம்பருப்பு ஆர்டர் செய்யப்பட்டு, அனைத்தும் நியாயவிலை கடைகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.  வரும் ஜூலை மாத முதல் வாரத்துக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மே மற்றும் ஜூன் மாதத்துக்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் விநியோகிக்கப்பட்டுவிடும் என்றும் கூறினார். 

இந்நிலையில், பொது விநியோகத் திட்ட குடும்ப அட்டைதாரர்கள் ஜூன் 2024 மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பினை ஜூலை 2024 ஆம் மாதம் பெற்றுக் கொள்ளலாம் என உணவுப் பொருள் வழங்கல் துறை இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஜூன் மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பினை பெற இயலாத ரேஷன் அட்டைதாரர்கள் ஜூலை மாதம் முதல் தேதியில் இருந்து மாதம் முழுவதும் பெற்றுக் கொள்ளலாம் என உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பாமாயில் மற்றும் துவரம் பருப்பினை வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள மாவட்ட வழங்கல் அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.

மேலும்

Why Organizers Think They Got Creamed

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு நேற்று மாநிலம் முழுக்க சுமுகமாக நடத்தப்பட்ட நிலையில், இந்தாண்டு க்ரூப் 4 காலியிடங்களுக்கு கட் ஆப் மார் எதுவாக இருக்கும் என்பது குறித்த தகவல்களை நாம் பார்க்கலாம்.

21 Nov 2024
Why Organizers Think They Got Creamed

பார்படாஸ் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல் அறிக்கையின்படி, சனிக்கிழமைக்குள், வெப்பமண்டல புயல் தீவை பாதிக்கும் என்றும், பார்படாஸில் ஜூன் 29-ம் தேதி நாள் முழுவதும் மழைக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

21 Nov 2024
Why Organizers Think They Got Creamed

கேமராவில் சிக்கிய ஆண்கள் உடை

21 Nov 2024
Why Organizers Think They Got Creamed

பொது விநியோகத் திட்ட குடும்ப அட்டைதாரர்கள் ஜூன் 2024 மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பினை ஜூலை 2024 ஆம் மாதம் பெற்றுக் கொள்ளலாம் என உணவுப் பொருள் வழங்கல் துறை இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

21 Nov 2024