டி டி வி தினகரன் கண்டனம்
- 03 Jul 2024 17:02:12
தங்களின் வாழ்வாதாரத்தை காக்க போராடும் மக்களை ஒடுக்கும் திமுக அரசின் ஜனநாயக விரோத போக்கு கடும் கண்டனத்திற்குரியது
பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் மேற்கொண்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கைது தங்களின் வாழ்வாதாரத்தை காக்க போராடும் மக்களை ஒடுக்கும் திமுக அரசின் ஜனநாயக விரோத போக்கு கடும் கண்டனத்துக்குரியது
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ள புதிய விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அறவழியில் உண்ணா விரதப் போராட்டம் மேற்கொண்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன வீடுகளில் கருப்பு கொடி கிராமசபை கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் பள்ளிகள் புறக்கணிப்பு தொடர் உண்ணாவிரதம் என பல்வேறு விதமான போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து வரும் பரத்தூர் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கைகளை செவிசாய்க்க முன்வராத திமுக அரசு அறவழியில் உண்ணாவிரதம் மேற்கொண்டவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்திருப்பது கரும் கண்டத்திற்குரியது
விளைநிலங்களையும் நீர் நிலைகளையும் காக்க போராடிவரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் உணர்வுகள் மதிக்காமல் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியை தீவிரப்படுத்தும் பரந்தூரர் பகுதி விவசாய மக்களுக்கு திமுக அரசு இளைக்கும் மிகப்பெரிய துரோகம் ஆகும்
எனவே காவல் துறையினர் கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளையும் பொதுமக்களையும் எவ்வித நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுவிப்பதோடு தங்களின் வாழ்வாதார உரிமைகளை காக்க போராடுபவர்களை அழைத்து பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்
கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள்