கூர்மையான பார்வை நேர்மையான பார்வை

IND vs SA: இறுதிப் போட்டிக்கும் மழை அச்சுறுத்தல்... ரிசர்வ் டே இருக்கா?

  • 29 Jun 2024 15:55:18
பார்படாஸ் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல் அறிக்கையின்படி, சனிக்கிழமைக்குள், வெப்பமண்டல புயல் தீவை பாதிக்கும் என்றும், பார்படாஸில் ஜூன் 29-ம் தேதி நாள் முழுவதும் மழைக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
Share:
How Product Designers Can Gamification for any Good.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில்  கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடருக்கான இறுதிப்போட்டி பார்படாஸில் உள்ள பிரிட்ஜ்டவுன், கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நாளை சனிக்கிழமை இரவு 8 மணிக்கு அரங்கேறும் நிலையில், அதில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மல்லுக்கட்ட உள்ளன. 

இந்நிலையில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இறுதிப் போட்டிக்கு மழை அச்சுறுத்தல் நிலவுகிறது. போட்டி நடக்கும் பார்படாஸின் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் மழைப் பொழிவுக்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பார்படாஸ் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல் அறிக்கையின்படி, சனிக்கிழமைக்குள், வெப்பமண்டல புயல் தீவை பாதிக்கும் என்றும், பார்படாஸில் ஜூன் 29-ம் தேதி நாள் முழுவதும் மழைக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இருப்பினும், ஐ.சி.சி டி-20 உலகக் கோப்பை 2024 இறுதிப் போட்டியின் போது வானிலை கணிப்பு மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி - ரிசர்வ் டே 

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையே நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் டே வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 30 ஐ.சி.சி டி20 உலகக் கோப்பை 2024 இறுதிப் போட்டிக்கான ரிசர்வ் நாளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும்

Why Organizers Think They Got Creamed

ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ இராமானுஜரின் திருமேனி மட்டும் 1000 ஆண்டுகள் கடந்தும் கெடாமல் இருக்கிறது? இது எப்படி? திருமேனியை பாதுகாக்க என்னவெல்லாம் செய்கிறார்கள்.

21 Nov 2024
Why Organizers Think They Got Creamed

தொடர் விடுமுறை எதிரொலியால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நெரிசல் ஏற்படாத வண்ணம் அங்குள்ள பாதுகாப்பு படையினரும் தேவஸ்தான நிர்வாகிகளும் பக்தர்களை பாதுகாப்பாக சுவாமி தரிசனம் செய்ய வைக்கிறார்கள்.

21 Nov 2024
Why Organizers Think They Got Creamed

திருப்பதி ஏழுமலையான் கோயில் செப்டம்பர் மாத தரிசன டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. காலை 10 மணிக்கு தேவஸ்தானத்தின் ஆன்லைனில் டிக்கெட்டுகள் வெளியிடப்படுகின்றன.

21 Nov 2024
Why Organizers Think They Got Creamed

கேமராவில் சிக்கிய ஆண்கள் உடை

21 Nov 2024