கூர்மையான பார்வை நேர்மையான பார்வை

அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் பங்களிப்பு ஓய்வூதியம்: இணையத்தில் பார்க்க தமிழக அரசு புதிய வசதி

  • 29 Jun 2024 15:48:21
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது பங்களிப்பு ஓய்வூதிய கணக்கு விபரங்களை ஆன்லைனில் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Share:
How Product Designers Can Gamification for any Good.

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் ஓய்வூதிய பங்களிப்பு குறித்து இணையத்தில் பார்த்துக்கொள்ளும் வகையில் தமிழக அரசு சார்பில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது,

தமிழகத்தில், கருவுல செயல்பாடுகள், நிதி மற்றும் மனிதவள மேலான்மை திட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால், மாதாந்திய ஊதிய பட்டியல் என அனைத்துமே கணிணிமயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு பணியாளர்கள் மட்டுமின்றி ஓய்வூதியம் பெறுபவர்களின் விபரங்களும், கணிணிமயமாக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் கடந்த 2003-ம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

இத்திட்டத்தின்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு, வருகிறது. இதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின், பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்கு விபரங்களை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாக உள்ளது. இதன் மூலம், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது பங்களிப்பு ஓய்வூதிய கணக்கு விபரங்களை ஆன்லைனில் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள, செய்திக்குறிப்பில்,

"பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணி புரியும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2023-24-ம் ஆண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்கு விவரங்கள் தொகுக்கப்பட்டு 1.7.2024 அன்று காலை 10 மணிக்கு அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தால் வெளியிடப்படுகிறது. cps.tn.gov.in/public என்ற இணையதள முகவரியில் சந்தாதாரர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்கு விவரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்

Why Organizers Think They Got Creamed

துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும் என காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது

21 Nov 2024
Why Organizers Think They Got Creamed

திருச்செந்தூர் முருகன் கோயிலை 5 ஆண்டுகள் சேர்ந்து கட்டினர். இந்த கோயில் மிகவும் ஆபத்தான இடத்தில் இருக்கிறது. ஆயினும் முருகனின் அருளாள் இதுநாள் வரை கோயிலுக்கு எந்த வித ஆபத்தும் வந்ததில்லை என்பதுதான் நிம்மதி தரும் விஷயம்.

21 Nov 2024
Why Organizers Think They Got Creamed

ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ இராமானுஜரின் திருமேனி மட்டும் 1000 ஆண்டுகள் கடந்தும் கெடாமல் இருக்கிறது? இது எப்படி? திருமேனியை பாதுகாக்க என்னவெல்லாம் செய்கிறார்கள்.

21 Nov 2024
Why Organizers Think They Got Creamed

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்: அடுத்தடுத்த உயிரிழப்புகளால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு - யார் காரணம்?

21 Nov 2024