ஏர்டெல், ஜியோ, வி.ஐ கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது ஏன்?
- 29 Jun 2024 15:12:50
சென்னை: ஜியோ நிறுவனம் வழங்கும் குடியரசு தின ஆஃபர் முடிவடைய இன்னும் 3 நாட்களே உள்ளன. இந்த ஸ்பெஷல் ஆஃபர் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
இந்தியாவின் டாப் டெலிகாம் சேவை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, வாடிக்கையாளர்களை கவர்வதற்காக அவ்வப்போது அதிரடி சலுகைகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், குடியரசு தினத்தை முன்னிட்டு ரூ.2,999 விலையில் வருடாந்திர பிரீபெய்டு பிளான் ஒன்றை ஆஃபர் ரேட்டில் அறிமுகம் செய்துள்ளது. இந்த சூப்பர் சலுகைகள் ஜனவரி 31 ஆம் தேதி வரை மட்டும் வழங்கப்படும். எனவே, ஜியோ வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை பெற முந்தவும்.
ஜியோவின் 2,999 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி காலம் ஒரு வருடம். இந்த திட்டத்தில், யூசர்கள் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றைப் பெறுவார்கள். இந்த பிளானில் தினசரி 2.5 ஜி.பி டேட்டா என ஒட்டுமொத்தமாக 365 நாட்களுக்கு 912.5 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் யூசர்கள் அன்லிமிடெட் 5G டேட்டாவையும் பெறுவார்கள்.