தொடர் விடுமுறை! வண்டியை திருப்பதிக்கு விட்ட பக்தர்கள்! ! ஒரு நாள் உண்டியல் வருமானம் எவ்வளவு?
- 29 Jun 2024 16:21:09
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கிறார்கள். அது போல் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கானோர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வருகை தருகிறார்கள்.
இதையொட்டி மக்கள் திருப்பதிக்கு சென்றுவிட்டனர். ஏராளமானோர் திருப்பதி சென்றுவிட்டதால் அங்கு கூட்டம் அலைமோதுகிறது. வைகுண்டம் க்யூ காம்ப்ளஸில் உள்ள அனைத்துக் கம்பார்ட்மென்டுகளிலும் பக்தர்கள் நிரம்பினர். இது தவிர நாராயணகிரி தோட்டத்தில் உள்ள அனைத்து ஷெட்டுகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.
திருமலையில் உள்ள கல்யாண வேதிகா மண்டபம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். பக்தர்கள் கூட்டம் கடந்த 13 ஆம் தேதி இருந்தே அதிகரித்து வருகிறது. நாளை இரவு வரை திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் இருக்கும் என்றும் தேவஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தரிசன வரிசையில் சென்ற பக்தர்களுக்கு ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் அன்னப்பிரசாதம், குடிநீர், டீ , காபி ஆகியவற்றை வழங்கி வருகிறார்கள், குழந்தைகளுக்கும் பால் வழங்கப்படுகிறது. கோயிலில் நேற்று முன் தினம் 66,782 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கல்யாண கட்டாவில் 36,229 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்